ஹைதராபாத்: விஜயசாந்தி ஸ்டைலில் ஆக்ஷன் படமான சாண்டியில் பிரியாமணி கத்திச்சண்டை போட்டு நடித்துள்ளாராம். இது தெலுங்குப் படமாகும்.
'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி, பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது வாங்கியதன் மூலம் முன்னணி நடிகையானார்.
பிரியாமணி தற்போது அதிரடி சண்டை படத்தில் நடிக்கிறார். சாண்டி என்ற பெயரில் தெலுங்கில் தயாராகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுகின்றனர். ஆக்ஷன் படமாக இதை எடுக்கின்றனர். இப்படத்தில் பிரியாமணி ரவுடிகளுடன் சண்டை போட்டு நடிக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பில் வலு ஏற்றி உள்ளாராம்.
சமீபத்தில் வில்லன்களுடன் பிரியாமணி கத்திச்சண்டை போடும் காட்சியை படமாக்கினர். விஜயசாந்தி பழைய படங்களில் ஆக்ஷனில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததுபோல் தனக்கும் இப்படத்தில் பாராட்டு கிடைக்கும் என்றார் பிரியாமணி.
இதை வி.சமுத்ரா இயக்குகிறார். பிரியாமணிக்கு இது ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்கின்றனர்.
Post a Comment