அஜீத், விஜய் என் இரு கண்கள்... அவர்களுடன் மீண்டும் இணைய ஆசை! - இயக்குநர் எழில்

|

Waiting Direct Ajith Vijay

அஜீத்தும் விஜய்யும் என் இரு கண்கள் மாதிரி. அவர்களுடன் இணைந்து மீண்டும் படம் பண்ண ஆசை என்கிறார் இயக்குநர் எழில்.

தமிழ் சினிமாவின் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்' என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது.

இதையடுத்து, ‘பெண்ணின் மனதைத் தொட்டு', ‘பூவெல்லாம் உன் வாசம்', ‘தீபாவளி', 'மனம் கொத்திப் பறவை' உள்ளிட்ட ஏராளமான கமர்ஷியல் வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "விஜய், அஜீத் இருவரையுமே இயக்கியதை பெருமையாக உணர்கிறேன். அவர்கள் இருவரும் என் கண்கள் மாதிரிதான். அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன்.

நல்ல கமர்ஷியல் கதைகள் உள்ளன. பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

‘தேசிங்கு ராஜா'வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் காமெடி இருக்கும். சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து, இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் கமர்ஷியல் வெற்றியாகும்," என்றார்.

 

Post a Comment