மாப்பிள்ளை ரெடி... அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

|

Anushka Getting Ready Say Bye Cinema

விரைவில் திருமணம்.. என்ற அறிவிப்பு பலகையை இப்போது த்ரிஷாவிடமிருந்து பிடுங்கி, அனுஷ்கா கையில் கொடுத்துவிட்டது மீடியா.

கடந்த சில தினங்களாக நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரபரப்பாக உலா வருகிறது மீடியாவில்.

தமிழில் இப்போது இரண்டாம் உலகம், சிங்கம் 2 படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. வேறு படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை.

தெலுங்கிலும் இரு படங்களில் நடித்துவருகிறார். ஆனால் எந்த புதுப்படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் அனுஷ்கா சினிமாவுக்கு குட்பை சொல்லக் கூடும் என்ற யூகங்கள் கிளம்பிவிட்டன.

அதற்கு சிகரம் வைத்தது போல, அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும், படங்களின் விற்பனை பாதிக்கக் கூடாது என்பதால் இப்போதைக்கு ரகசியம் காப்பதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர்தான் மாப்பிள்ளையாம்.

மறுப்பறிக்கை எப்போ விடப் போறீங்க அனுஷ்கா!!

 

Post a Comment