ரசூல் பூக்குட்டி புதிதாக இந்திப்படம் இயக்குவதாகவும், அதில் ரஜினி - அமிதாப் இணைந்து நடிப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் பணிகள் தொடர்பாகவே அவர் தனது அலுவலகம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்த ரசூல் பூக்குட்டி, தான் அடுத்து இயக்கும் புதுப்படம் குறித்து ரஜினியிடம் பேசியதாகவும், அதில் அமிதாப்புடன் ரஜினியும் இணைந்து நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.
இதனை மறுத்துள்ளார் சௌந்தர்யா ரஜினி.
அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கோச்சடையானின் ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார் என்றும், அது தொடர்பாக பேசவே ரசூல் பூக்குட்டி தனது அலுவலகத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரசூல் பூக்குட்டி, கோச்சடையான் ஒலி வடிவமைப்பு குறித்து சௌந்தர்யாவைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் ரஜினியை வைத்து நான் இயக்கப் போவதாக வந்த செய்தி எனக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது. அப்படி ஒரு திட்டமே இல்லை. ரஜினி சாருக்கு தேவையில்லாத மன உளைச்சலை இந்த செய்திகள் தருமே என்ற கவலை எனக்குள்ளது. அமிதாப்பிடம் என் படத்தின் ஸ்கிரிப்டைக் கொடுத்தது மட்டுமே உண்மை," என்றார்.
ரசூல் பூக்குட்டி நியாயமாக வருத்தப்படவேண்டியது அவரது மேலாளரிடம்தான். அவர்தான் ரசூல் பூக்குட்டி ரஜினியைச் சந்தித்து கதை பற்றி விவாதித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார்!!
Post a Comment