சென்னையில் ஒருநாள் திரைப்படத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் வெளியான ட்ராஃபிக் படத்தை ராதிகாவின் ராடான் நிறுவனம் தமிழில் ‘சென்னையில் ஒருநாள்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளது. இப்படம் மூளைச்சாவு அடைந்த தமிழக இளைஞர் ஹிதேந்திரனின் இதயத்தை வேறொருவருக்கு தானம் செய்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, இனியா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தின் இறுதியில் தோன்றி பேசினால் நன்றாக இருக்கும் என சரத்குமார் விரும்பினார். இதற்காக ஜெயலலிதாவிற்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால் படத்தில் தோன்ற முதல்வர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து தற்போது முதல்வர் நடிக்க திட்டமிருந்த வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.இதில் நடிகர் சூர்யாவாகவே படத்தில் தோன்றி உடல்தானத்தைப் பற்றி சொல்லும் விஷயங்கள் கடைசி 15 நிமிடங்கள் பேசுகிறாராம். இதுவும் படத்தை நகர்த்தி செல்வதாக அமைந்து இருக்கும் என சரத்குமார் தெரிவித்தார்.
ஆனால் மலையாலத்தில் வெளியான ட்ராஃபிக்கில் நடிகர் பேசும் காட்சி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment