தமிழ் சினிமாவில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட பவர் ஸ்டார் சீனிவாசனையும், ஒற்றைப் பாடல் பாட சிம்புவையும் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான்.
இப்போது அந்த வரிசையில் வெங்கட் பிரபுவையும் சேர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது. ரெண்டாவது படம் என்ற படத்தில் ஒற்றைப் பாடலுக்கு இனியாவுடன் கோட் சூட் போட்டுக் கொண்டு நடனமாடுகிறார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு தற்போது கார்த்தி-ஹன்சிகா மொத்வானி நடிப்பில் ‘பிரியாணி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சிஎஸ் அமுதனின் ரெண்டாவது படத்தில் 1980களில் பிரபலமான மெட்டில் ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனமும் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண். இப்பாடலுக்கு நீங்கள் ஆடினால் நன்றாக இருக்கும் என வெங்கட் பிரபுவிடம் கேட்டுக் கொண்டாராம் அமுதன். ஜோடி இனியா என்றதும் உடனே ஒப்புக் கொண்டு இனியாவுடன் நடனமாடுகிறார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில், "ரெண்டாவது பட'த்தின் இயக்குர் சி.எஸ்.அமுதன் எனக்கு நெருங்கிய நண்பர். இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவேண்டும் என கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பான அழைப்பின் பேரிலேயே இப்பாடலில் நடனமாட விருப்பம் தெரிவித்தேன்.
தற்போதெல்லாம் நடிகர்களின் கால்ஷிட் தேதியை வாங்குவதைவிட நடிகைகளின் கால்ஷீட் வாங்குவதுதான் பெரும் கஷ்டமாக உள்ளது. பிரியாணி படத்தின் படப்பிடிப்பை மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளோம். கார்த்தி ‘ஆல் இன் ஆல் அழகுராஜா' படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.
அடுத்த மாதம்தான் ஹன்சிகா வருகிறார். அவர் வந்தததும் ‘பிரியாணி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிடும். விரைவில் படப்பிடிப்பை முடித்து வரும் ஆகஸ்டில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம், என்றார்.
Post a Comment