சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் - தி லெஜன்ட் படத்தின் சிறிய ட்ரைலர் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஜினி, தீபிகா, சரத்குமார், ஷோபனா உள்பட பலரும் நடித்துள்ள 3 டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படம் கோச்சடையான்.
தமிழ், ஆங்கிலம், ஜப்பான் உள்பட 7 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. படத்தின் இரு ஸ்டில்களைத் தவிர வேறு எதையும் இதுவரை தயாரிப்பாளரோ, இயக்குநரோ வெளியிடவில்லை.
இந்த நிலையில் படத்தின் முதல் டீசர் (முன்னோட்டம்) மே மாதம் பிரான்சில் நடக்கும் கேன்ஸ் பட விழாவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ரஜினியே இதை வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் வரும் ஏப்ரல் 14-ம் தேதியே இந்த முதல் டீசரை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் இது ட்ரைலராக இருக்காது, ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி கேன்ஸ் விழாவில் படத்தின் ஒரு பாடல் மற்றும் டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.
Post a Comment