ஜூன் 27ல் ஜீவி பிரகாஷ்- சைந்தவி திருமணம்!

|

Gv Prakash Saindhavi Wedding On June 27

சென்னை: வரும் ஜூன் 27-ம் தேதி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் - பாடகி சைந்தவி திருமணம் நடக்கிறது.

ஏஆர் ரஹ்மானின் உறவினரும் பிரபல இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவியை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

25 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார், திருமணத் தேதியை அறிவிக்காமல் ஒத்திப் போட்டு வந்தார்.

இப்போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் ஜூன் 27-ம் தேதி சைந்தவியைக் கைப்பிடிக்கப் போவதாக ஜீவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இவர்களின் திருமண உடையை அனுவர்தன் வடிவமைக்கிறார்.

இப்போது விஜய்யின் தலைவா, பாரதி ராஜாவின் அன்னக்கொடி உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

 

Post a Comment