சென்னை: சித்திக் கொடுமை, களஞ்சியத்தின் மிரட்டல், காணாமல் போய் திரும்பி வந்த பரபரப்புகளின் விளைவு, அஞ்சலியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.
ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களுக்கு பேசிய சம்பளத்தைவிட கூடுதலாகத் தர தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
தமிழை விட தெலுங்கில் நடிக்கவே அஞ்சலி அதிக ஆர்வம் காட்டுகிறார்.
சமீபத்திய பரபரப்புகளுக்குப் பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.
எனவே தயாரிப்பாளர்களும் அதிக சம்பளம் கொடுத்தாவது அவரை ஒப்பந்தம் செய்ய நினைக்கின்றனர்.
தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக போல்பச்சன் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ரூ 30 லட்சம்தான் பேசப்பட்டதாம்.
ரவிதேஜா ஜோடியாக 'பலுபு' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ரூ 60 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. இதற்கும் கனிசமான சம்பளம் பேசியுள்ளார். பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க அவரிடம் பேசி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
Post a Comment