மலையாளத்தில் முன்னணி நடிகையான ரீமா கலிங்கலும் மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரீமா கலிங்கல் சமீபத்தில் தமிழில் யுவன் யுவதி படத்தில் நடித்திருந்தார். ஆஷிக் அபு மலையாளத்தில் சால்ட் அண்ட் பெப்பர், டாடி கூல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இருவரும் 22 பீமேல் கோட்டயம் படத்தில் நடித்ததிலிருந்து காதலித்து வந்ததாகவும், திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதனை ஆஷிக் அபு மட்டும் மறுத்துள்ளார்.
நான் திருமணம் செய்தால் அதை வெளியில் சொல்ல எந்த தயக்கமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் ரீமா கலிங்கல் இதுகுறித்து எதுவும் பேச மறுத்துவிட்டார்.
Post a Comment