தனது சிங்கம் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கத் திட்டமிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இதற்கான அறிவிப்பை இந்த வாரம் அறிவிக்கப் போகிறார்.
சூர்யா நடிக்க, ஹரி இயக்கும் ‘சிங்கம்-2' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கிறார் சூர்யா.
இந்த நிலையில் சிங்கம் 2 படத்துக்கான விளம்பரங்களை ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக தான் முன்பு நடித்த சிங்கம் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கென்று ஒரு போட்டியை அறிவிக்கவிருக்கிறார்கள்.
இதுகுறித்து சூர்யா கூறுகையில், "சிங்கம்' படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த போட்டி பற்றிய விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். அதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஒரு நாள் முழுவதும் என்னுடன் படப்பிடிப்பில் இருக்கலாம். இதற்காக ஒரு ‘வெப்சைட்' தொடங்கப்படுகிறது," என்றார்.
Post a Comment