அடுத்த இந்திப் படத்துல ஜெயிச்சிடுவேன் - தமன்னா

|

Tamanna Hopes On Her Next Bol Lywoo

சென்னை: ஹிம்மத்வாலா படத்தில் தோற்றாலும், அடுத்த இந்திப் படத்தில் நான் ஜெயித்துக் காட்டுவேன் என்கிறார் தமன்னா.

எண்பதுகளில் ஜிதேந்திரா - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ஹிம்மத்வாலா. அந்தப் படத்தை தமன்னா - அஜய் தேவ்கனை வைத்து ரீமேக் செய்தார் சஜித் கான்.

ஆனால் படம் படு தோல்வியைத் தழுவியது. இதனால் தமன்னாவின் பாலிவுட் கனவு அம்பேல் என்ற நிலை உருவாகியுள்ளது.

இருந்தாலும் தமன்னா கைவசம் இன்னும் ஒரு பெரிய இந்திப் படம் உள்ளது. முதல் படத்தில் விட்டதை, இரண்டாவது படத்தில் பிடித்துவிடுவோம் என்ற தைரியத்தில் உள்ளார் தமன்னா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹிம்மத்வாலா தோற்றுப் போனது உண்மைதான். ஒருவேளை ரசிகர்கள் ஸ்ரீதேவியோடு என்னை ஒப்பிட்டு விட்டார்களோ என்னமோ...

இந்தப் படம் தோற்றுப் போனதில் வருத்தமாக இருந்தாலும், உண்மையை ஏற்றுக் கொண்டு, அடுத்த வேலைகளில் இறங்க வேண்டும் என நினைப்பவள் நான்.

எனது அடுத்த இந்திப் படம் என்னை நிரூபிக்கும் என நம்புகிறேன்.

தமிழில் இனிமேல்தான் எனது பெரிய இன்னிங்ஸ் தொடங்கப் போகிறது," என்றார்.

 

Post a Comment