ஹைதராபாத்: சித்தியும், சித்தப்பாவும் என்னைக் கொடுமைப்படுத்தியதால்தான் நான் வெளியேறினேன். சித்தப்பா என்னை தலைமுடியைப் பிடித்து சரமாரியாக அடித்தார். கடுமையாக திட்டினார். அவர் மீதும், சித்தி மீதும் போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டாம் என்று தனது அண்ணன் ரவிசங்கரிடம் போனில் பேசியுள்ளார் நடிகை அஞ்சலி.
மாயமாகிப் போன அஞ்சலியை ஒருபக்கம் அத்தனை பேரும் வலை வீசி தேடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தான் அஞ்சலியுடன் பேசிய ஆடியோ பதிவை வீரப்பன் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ளார் அவரது அண்ணன் ரவிசங்கர்.
இந்த தொலைபேசி உரையாடல் பதிவை தெலுங்கு டிவி சானல்கள் நேற்று ஒளிபரப்பின. அதில் அஞ்சலி கூறியுள்ளதாவது:
ஹலோ... அண்ணா நான் பாலா பேசுறேன். உன் செல்போன் நம்பர் என்னிடம் இல்லே... அதனால் அம்மாவிடம் வாங்கி பேசறேன். நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒன்றும் பயம் இல்லை. என்னோட ஒருத்தர் இருக்கிறார். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதுசரி... நீ ஏண் நான் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தே...? உடனே அந்த புகாரை வாபஸ் வாங்கு.... நான் நல்லாத்தான் இருக்கிறேன். பத்திரமாகவும் இருக்கிறேன். நீ புகார் கொடுத்ததால எனக்கு பிரச்சினை ஆயிடுச்சு...நான் காணவில்லை என்று கொடுத்த புகாரை மட்டும் வாபஸ் வாங்குடா.. அந்த ராட்சசி (சித்தி பாரதிதேவி) மீதும் அந்த ஆளு (சித்தப்பா சூரிபாபு) மீதும் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காத.
நாளை -அதாவது இன்று - நான் நேரில் வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.
சித்தியும், சித்தப்பாவும் என்னை கொடுமைப்படுத்துறாங்க... அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்... ஹைதராபாத் ஓட்டலில் இருந்து நான் வெளியேறிய அன்றும் அந்த ஆள் என்னை தலைமுடியை பிடித்து இழுத்து செருப்பால் அடிச்சான்... கடுமையாக திட்டினான். அவன் என்னை கொடுமை படுத்துனான். இல்லேன்னா நான் ஏண் காணாமல் போகிறேன்.
அவனுக்கு என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கு...? அவங்க கொடுமை தாங்க முடியாமல்தான் நான் வீட்டை விட்டு ஓடினேன். இந்த விஷயத்தில் நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பியா? அந்த பொம்பளைக்கும் (பாரதிதேவி) அந்த ஆளுக்கும் பயப்படாம நீ எனக்கு ஆதரவாக இருந்தால் நான் வெளியே வர தயாரா இருக்கேன்.. என்று அஞ்சலி பேசியதாக அந்த ஆடியோ பதிவு கூறுகிறது.
இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அஞ்சலி கூறியுள்ளார். இதனால் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் தரப்பிலும் ஒருவித பரபரப்பு காணப்படுகிறது. அஞ்சலி வெளியில் வந்து என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Post a Comment