கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளையும் வசூலையும் குவித்த பிட்சா படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடுத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்தப் படத்தை பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் மூவீஸ் கதிரேசன் தயாரிக்கிறார்.
ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த். தெலுங்கில் அவருக்குள்ள மார்க்கெட்டை வைத்து இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இருமொழிப் படமாகத் தயாரிக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
கதிரேசன் ஏற்கெனவே தனுஷ் நாயகனாக நடிக்க, ஏ சற்குணம் இயக்கும் நய்யாண்டி படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், "தயாரிப்பாளர் கதிரேசனுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது த்ரில்லர் படமல்ல.. நல்ல காதல் படம். நாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம்," என்றார்.
Post a Comment