மதுரை நடிகர் வடிவேலு தனது மகள் திருமணத்தை இன்று மதுரையில் மிகவும் ரகசியமான முறையில்நடத்தினார்.
வடிவேலு கடந்த சட்டசபைத்தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்த்தை கடுமையாக எதிர்த்தும் பிரசாரம் செய்தார். இதனால் தேமுதிகவினரின் கடும் கோபத்திற்கு ஆளானார்.
தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்ததாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானதாலும் வடிவேலு நிலைமை மோசமானது. அவருக்குப் படம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. வெளியிலும் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார் வடிவேலு. திருமணம் மதுரையில் இன்று நடந்தது. திருமணத்திற்கான அழைப்பிதழை வடிவேலு பலருக்கும் கொடுத்திருந்தாலும் கூட மிகவும் சிலர்தான் வந்திருந்தனர். காரணம்,வடிவேலுவே அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வர வேண்டாம் என கூறியிருந்ததால் என்று சொல்கிறார்கள்.
தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணம் மிகவும் ரகசியமான முறையில் நடந்ததால் பலருக்கும் அது வடிவேலு வீட்டு திருமணம் என்பதே தெரியவில்லை.
Post a Comment