ஹைதராபாத்: தெலுங்கு திரையுலக வேலைநிறுத்தத்தால் ஹைதராபாத்தில் நடந்து வந்த அஜீத்-சிவா பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கியது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது என்று இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் நடந்து வந்த அஜீத் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அஜீத் சென்னைக்கு கிளம்புகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஷூட்டிங் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து இப்படத்தில் நடிக்கும் வித்யுலேகா ராமன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
தெலுங்கு திரையுலக ஸ்டிரைக். அதனால் தல, என்டிஆர் ஷூட்டிங் இல்லை. சென்னைக்கு இன்று திரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment