இலங்கைக்குப் போவதா? பாடகர் மாணிக்க விநாயகம் வீடு முற்றுகை!

|

Manikka Vinayagam Trouble

சென்னை: இலங்கைக்குப் போகும் இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பெரியார் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.

இலங்கையில் நடக்கும் விழாக்களுக்கு தமிழகத்திலிருந்து யாரும் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக திரையுலகினர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி என அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே இலங்கை சென்று வந்த அசின், பாடகர் கிரீஷ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி போன்றோருக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இப்போது இலங்கை வவுனியாவில் கட்டப்பட்டுள்ள கோயில் ஒன்றில் நடக்கும் இசை நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் பங்கேற்றுப் பாடுவதாக தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகத்தினர் அவரது இன்று சென்னையில் உள்ள அவர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது வீட்டிலிருந்த மாணிக்க விநாயகம், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். இலங்கை செல்லும் இசைக் குழு எனது தலைமையில் செல்லவில்லை. அந்த குழுவில் நானும் ஒருவன். குழு செல்லாவிட்டால் நானும் செல்லமாட்டேன். ஆனால் அதை அந்தக் குழுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பின்னர் போலீசார் கைது செய்தனர்.

 

Post a Comment