ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலக வேலைநிறுத்தம் நடப்பதால் சிவா இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ரத்தாகிவிட்டது என்று வெளியான தகவல்கள் உண்மையில்லை என்று கூறப்படுகிறது.
அஜீத் குமார் சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலக வேலைநிறுத்தம் நடப்பதால் அஜீத் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அப்படத்தில் நடிக்கும் விதியுலேகா ராமன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் வேலைநிறுத்தம் எதுவும் நடக்கவில்லை என்றும், அஜீத் ஷூட்டிங் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் தயாரிப்பு யூனிட்டுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். மேலும் திட்டமிட்டபடி ஷூட்டிங் வரும் 20ம் தேதி வரை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் தமன்னா, சந்தானம், விதார்த், ரமேஷ் கன்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
Post a Comment