நடிகர் சங்க உண்ணாவிரதம்... வராத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை?

|

Nadigar Sangam Send Notice The Absentees

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உள்ளிட்ட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர். ஆனால் நடிகைகள் பெரும்பாலானோர் வரவே இல்லை.

இது திரைத்துறையினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதாநாயகர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்து இருந்தனர். வெளிநாடுகளில் வரமுடியாத சூழலில் இருந்த விஜய் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார். உண்ணாவிரதத்துக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் உள்ளூரில் இருந்த பல நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா, காஜல் அகர்வால், அசின், அஞ்சலி, ஹன்சிகா, டாப்சி, குஷ்பு, சமந்தா, கார்த்திகா, லட்சுமி மேனன் போன்றோர் உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.

இவர்கள் தமிழ்ப் பெண்கள் இல்லை. எனவேதான் வரவில்லை என்று கூறப்பட்டாலும், தமிழ் சினிமாவில் சம்பாதித்து தமிழகத்தில் சொத்துகள் வாங்கும் இவர்கள், தமிழருக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதத்துக்கு வராமல் போய்விட்டார்களே என பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் பார்த்திபன், விமல், சசிகுமார், கார்த்திக், சந்தானம், கடல் பட நாயகன் கவுதம் போன்றோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உண்ணாவிரதத்துக்கு வராமலும், உரிய விளக்கம் அளிக்காமலும் போன நடிகர் நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 

Post a Comment