சென்னை: அமெரிக்க ஆன் லைன் ஷாப்பிங் நிறுவன தூதராக நடிகை ஸ்ருதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆன்-லைன் மூலமாக, உடைகள், காலணிகள், பேக் உள்ளிட்ட பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பொருட்களை வாங்குவோருக்கு மிகவும் பரீட்சயமான நிறுவனம் அமெரிக்கன் ஸ்வான்.
அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் "ஆன்-லைன் ஷாப்பிங்கில் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம். இந்த நிறுவனம் தன் இந்திய விளம்பர தூதராக ஸ்ருதி ஹாசனை நியமித்துள்ளது.
ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தது குறித்து அந்த நிறுவனம்,"எங்கள் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பதற்கு உற்சாகமும், இளமை துடிதுடிப்பும் நிறைந்த ஒரு பெண் தேவைப்பட்டார். மேலும் இளைய தலைமுறையினரை கவர கூடிய ஆற்றலும் அவருக்கு வேண்டும். இதையெல்லாம் வைத்து யோசித்தபோது எங்களின் முதல் தேர்வு ஸ்ருதி தான். அதனால் தான் அவரை எங்களின் விளம்பர தூதராக நியமித்தோம்" என்கின்றனர்.
Post a Comment