சென்னை: எனது மகள் அஞ்சலி காணாமல் போனதும் அவரை முன்பு காதலித்த நடிகர் ஜெய்யுடன் பேசினேன். தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறி விட்டார் என்று கூறியுள்ளார் அஞ்சலியின் சித்தியான பாரதி தேவி.
அஞ்சலி விவகாரத்தில் தற்போது பல்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபட ஆரம்பித்துள்ளன. தெலுங்கு இளம் நடிகர் வேணு மல்லாடியுடன் அவர் கடைசியாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் ஹைதராபாத் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அஞ்சலியுடன் நடித்த நடிகர்கள் சிலரின் பெயரும் இதில் அடிபட ஆரம்பித்துள்ளது. அஞ்சலி பலரை காதலித்தவர் என்று அவரது சித்தி பாரதிதேவி நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் தீவிரமாக காதலித்ததாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் திடீரென நான் இனிமேல் ஜெய்யுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அஞ்சலி அறிக்கையும் விட்டார். அத்தோடு அந்த விவகாரம் அமுங்கிப் போனது. தற்போது அஞ்சலி மாயமாகியிருப்பதால் ஜெய்யின் பெயர் மீண்டும் அடிபட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அஞ்சலியைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கூறி புகார் கொடுக்க வந்திருந்த பாரதி தேவியிடம், ஜெய் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், அது 6 மாதத்துக்கு முன்பு நடந்த கதை. அந்த பிரச்சினை அப்போதே பேசி தீர்க்கப்பட்டுவிட்டது. நடிகர் ஜெய்யுடன் கூட பேசிவிட்டேன். அவர் அஞ்சலி பற்றி எதுவும் தெரியாது என்கிறார். அஞ்சலியுடன் நடித்த மற்ற கதாநாயக நடிகர்களிடமும் கேட்டுவிட்டேன். அவர்களும் அஞ்சலி பற்றி எதுவும் தெரியாது என்கிறார்கள் என்றார்.
Post a Comment