முன்னணி நடிகையான ரம்யா நம்பீசனுக்கும் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ராமன் தேடிய சீதை, குள்ளநரிக் கூட்டம், சமீபத்தில் வெளியான பீட்சா போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். மலையாளப் படங்களிலும் தொடர்ந்து பிஸியாக உள்ளார்.
‘இது பத்திரமனல்' மலையாளப் படத்தில் நடித்ததிலிருந்து அதில் நடித்த உன்னி முகுந்தனும் ரம்யா நம்பீசனும் நெருக்கமாகப் பழகி வருகின்றனர்.
இந்த நெருக்கம் இப்போது காதலாகிவிட்டதாகவும், இருவரும் விரைவில் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தது போய், இப்போது பகிரங்கமாகவே சுற்ற ஆரம்பித்துள்ளார்களாம்.
ரம்யா நம்பீசனுக்கு ஓரிரு படங்கள் கைவசம் உள்ளன. இவற்றை முடித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் வழக்கம்போல ரம்யா நம்பீசன் இதனை மறுத்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளோம் என்று தெரிவித்தார்.
Post a Comment