அஞ்சலியை காணவில்லை: ஆந்திரா ஹோட்டலில் இருந்து மாயம்: ஷூட்டிங் நிறுத்தம்

|

Anjali Goes Missing From Hyderabad Hotel

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயமாகியுள்ளார்.

சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். ஹோட்டலில் தங்கி அவர் ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது.

அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கிற்காக தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் பணத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக அஞ்சலி புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment