சென்னை: தலைவா பட ஷூட்டிங்கிற்காக சந்தானம் ஆஸ்திரேலியா சென்றுள்ளதால் வாலு படத்தின் கிளைமாக்ஸ் எடுக்க முடியாமல் உள்ளது.
விஜய், அமலா பால் நடித்து வரும் தலைவா படத்தின் ஷூட்டிங் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சந்தானமும் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் அங்கு நடித்துக் கொண்டிருக்க அவர் எப்பொழுது வருவார் என்று வாலு படக்குழு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
வாலு பட கிளைமாக்ஸில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் ஆகியோரை வைத்து ஒரு சிறப்பு காமெடி சீனை படம்பிடிக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். ஆனால் சந்தானம் இல்லாததால் கிளைமாக்ஸ் சீனை எடுக்க முடியாமல் உள்ளது. சந்தானம் எப்பொழுது வருவார் என்று வாலு படக்குழு ஆவலுடன் காத்திருக்கிறது.
இந்த கிளைமாக்ஸ் காட்சி ஒரு கோவிலில் வைத்து படமாக்கப்படவிருக்கிறது.
Post a Comment