விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ ஆர் ரஹ்மானுடன் கை கோர்க்கிறார் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு துருவ நட்சத்திரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாதான் நாயகன்!
பல சர்ச்சைகளில் சிக்கினாலும் கவுதம் மேனனின் புதுப்பட அறிவிப்பு வந்தாலே திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுவிடும்.
கவுதம் மேனன் இயக்கிய சமீபத்திய படங்கள் மூன்று வரிசையாக காலை வாரிவிட்டன. விடிவி நிறுவனத்திலிருந்து பிரிந்தது, பார்ட்னர்களுடன் பிரச்சினை, நீதிமன்ற வழக்கு என ஏக பிரச்சினைகள் இருந்தாலும், அடுத்த படம் குறித்து கவுதம் மேனன் அறிவித்ததுமே அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் படத்துக்கு துருவ நட்சத்திரம் என தலைப்பிட்டுள்ளனர். கதை, திரைக்கதை அனைத்தையுமே சூர்யா முடிவு செய்துவிட்டாராம்.
இந்தப் படத்தில் மீண்டும் ரஹ்மானுடன் இணைகிறார் கவுதம் மேனன். இதுகுறித்து அவர் கூறுகையில், "அனைத்தையும் சூர்யா முடிவு செய்துவிட்டார். படத்தின் தலைபபுக்கும் ஓகே சொல்லிவிட்டார்.
இது ஒரு ஆக்ஷன் படம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்," என்றார்.
Post a Comment