பொசுக்குன்னு போயிடுச்சி தமன்னாவின் பாலிவுட் கனவு!

|

Himmatwalaa S Failure Is Big Setback For Tamanna   

தமன்னாவின் முதல் பாலிவுட் படமான ஹிம்மத்வாலா படுதோல்வியைத் தழுவியதால், இனி அவர் தொடர்ந்து அங்கே தாக்குப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்மையில் தமன்னா அறிமுகமானதே இந்தியில்தான். பல ஆண்டுகளுக்கு முன் சாந்த் கா கேஷன் செஹ்ரா என்ற படத்தில்தான் அவர் அறிமுகமானார். அது தோல்வியடைந்ததால், தென் இந்திய சினிமாவில் நுழைந்து ஜெயித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் அஜய் தேவ்கன் ஜோடியாக தமன்னா நடித்த படம்தான் ஹிம்மத் வாலா. இந்தப் படத்தை சஜித் கான் இயக்கினார்.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் எதிர்ப்பார்த்ததை விட ரொம்ப சுமாரான வசூலையே பெற்றுள்ளதாம்.

தமன்னா பார்க்க அழகாக இருந்தாலும், அவருக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை என்று பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே மேலும் இரண்டு இந்திப் படங்களுக்கு தமன்னா ஒப்பந்தமாகி இருந்தாலும், இந்த முதல் தோல்வி, அவருக்கு பெரிய பின்னடைவாக உள்ளது.

இந்தியில் தாக்குப் பிடிப்பாரா... அல்லது போன வேகத்தில் முழுசாக தமிழ் - தெலுங்குக்கே திரும்புவாரா... பார்க்கலாம்!

 

Post a Comment