அடுத்த படத்திலும் ஏ ஆர் ரஹ்மான்தான் இசை அமைக்கிறார் என மணிரத்னம் மனைவி சுஹாசினி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் இளையராஜாவும் மணிரத்னமும் சந்தித்துப் பேசியதாகவும், இந்த சந்திப்பின்போது பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் கை கோர்க்க முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.
எனவே மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மணிரத்னம் மனைவி சுஹாசினி, இருவரின் சந்திப்பையும் மறுக்கவில்லை. ஆனால் மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு இசை அமைக்கப் போவது ரஹ்மான்தான் என்று கூறியுள்ளார்.
இந்தப் படம் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் அடிப்படையில் உருவாகும் சரித்திரப் படம். சில ஆண்டுகளுக்கு முன் ஆமீர்கானை வைத்து மணிரத்னம் தொடங்கி பின் நிறுத்திவிட்ட லஜ்ஜோவைத்தான் மீண்டும் புதுப்பிக்கிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.
Post a Comment