ஹீரோக்களாக அறிமுகமாகிறவர்கள் வந்த புதிதில் பம்மிக் கொண்டிருப்பதும், கொஞ்சம் வளர்ந்ததும் நாட்டாமை பண்ணுவதும் தமிழ் சினிமா அன்றாடம் பார்த்து வரும் சமாச்சாரங்கள்.
அந்த வரிசையில் சீக்கிரம் சேர்ந்து விடுவார் போலிருக்கிறது நயனின் புது நாயகன்.
நடித்த படங்கள் ஒன்றும் பெரிதாகப் போகாவிட்டாலும், நடிகரின் சேட்டைக்கும் நிர்பந்தங்களுக்கும் குறைச்சலில்லை.
இனி ஒரு படத்தில் நடித்த நடிகையுடன் திரும்ப நடிப்பதில்லை என்று வேறு தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டுள்ள நடிகர், தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு யார் யார் ஹீரோயின் என்ற லிஸ்டையும் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர்களிடம். நயனத்துக்கு மட்டும் இந்த நிபந்தனை பொருந்தாதாம்.
அதன்படி, தன் அடுத்த படத்துக்கு ஹிம்மத்வாலா ஹீரோயினை போடும்படி கேட்டுள்ளாராம். படம் கவிழ்ந்து அம்மணியின் மார்க்கெட் மவுசு குறைந்தாலும், சம்பளம் மட்டும் ஒரு கோடிக்கு குறையாமல் தந்துவிட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளாராம்.
Post a Comment