முன்பெல்லாம் நடிகைகளுக்கு திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் என தகவல் வரும். அடுத்து இன்னாருக்கு குவா குவா என தலைப்பிட்டு செய்தி போடுவார்கள்.
இப்போது அதற்கு நேர் எதிர். கர்ப்பம் என செய்தி வெளியான அடுத்த சில தினங்களில் மறுப்பு அறிக்கை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.
சில வாரங்களுக்கு முன்பு சினேகா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. அடுத்த சில தினங்களில் அவரது கணவர் பிரசன்னாவே பத்திரிகைகளை அழைத்து, சினேகா கர்ப்பமாக இல்லை. அவர் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளார் என்று விளக்கமளித்தார்.
இப்போது கிட்டத்தட்ட அதே போன்ற செய்தி. இந்த முறை ஜெனிலியா. கடந்த ஆண்டு ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியா, இப்போது கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியானது.
அதனை ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ், தன் பிஆர்ஓ மூலம் மறுத்துள்ளார்.
ஜெனிலியாவுக்கோ ரிதேஷுக்கோ இப்போது குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமில்லை என்றும், மேலும் பல படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் புதிய படத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதனை ஜெனிலியாவும் உறுதிப்படுத்தியுள்ளார். நான்கைந்து இயக்குநர்கள் தமிழ் மற்றும் இந்திப் படங்களுக்காக அவரிடம் பேசிக் கொண்டுள்ளார்களாம்.
Post a Comment