25 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்!

|

Kamal S Pesum Padam Goes Shanghai

சென்னை: கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற பேசும் படம் திரைப்படம் சீனாவின் ஷாங்காய் திரைப்பட விழாவுக்குப் போகிறது.

இந்தப் படம் கடந்த 1988-ம் ஆண்டு வெளியானது. படத்தில் வசனங்கள் கிடையாது. எந்தப் பாத்திரமும் பேசாமல் நடித்த படம் இது.

கமல் ஹாஸனுடன் அமலா நடித்திருந்தார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் இந்தியில் புஷ்பக் என்ற பெயரிலும், தெலுங்கில் புஷ்பக விமானம் என்றும் வெளியானது.

அன்றைக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் குவித்தது பேசும் படம். வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து இப்போது ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

கால் நூற்றாண்டு கழித்தும் பேசும் அளவுக்கு தரத்தில் சிறந்த படமாக பேசும் படம் திகழ்வதைத்தான் இது காட்டுகிறது என திரையுலகினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

 

Post a Comment