‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் 'வாராயோ வெண்ணிலாவே'!

|

Attakathi Dinesh Signs His Second Movie

அட்டகத்தி படத்தில் நாயகனாக நடித்த தினேஷ், அடுத்து நடிக்கும் படம் வாராயோ வெண்ணிலாவே.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவன தயாரிப்பாளர்கள் பி. ரமேஷ், இமானுவேல் இருவரும் அதிக பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, முருகதாஸ் உள்பட பலரும் நடிக்கின்றனர்.

ராணா ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஆர் சசிதரன் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கி வெற்றி பெற்ற ‘சென்னை - 28' படத்தின் திரைக்கதை எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றியவர்.

சசிதரனிடம் படம் பற்றிக் கேட்டோம்...

"பணக்கார இளைஞராக வரும் தினேஷ் சென்னையிலிருந்து கேரளாவுக்கு வேலை செய்ய செல்கிறார். சென்ற இடத்தில் அழகான பெண்ணை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். காதலின் விளைவு, எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் கதை முடிகிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன,' என்றார்.

படத்தைப் பற்றி நடிகர் தினேஷ் என்ன சொல்கிறார்?

"அட்டகத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறப்பான கதைக்களம் என்பதால் இதுவும் எனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையுடன் நடிக்க ஒத்துக் கொண்டேன், என்கிறார்.

 

Post a Comment