ஒரு பக்கம் படங்கள் இயக்கினாலும், தனி ஹீரோவாக நடிப்பதிலும் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் கரு பழனியப்பன்.
பார்த்திபன், எஸ் எழில் ஆகியோரிடம் பணியாற்றி, பார்த்திபன் கனவு மூலம் வித்தியாசமான இயக்குநராக வெளிவந்தவர் கரு பழனியப்பன்.
தொடர்ந்து சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை போன்ற படங்களை இயக்கினார். இவற்றில் மந்திரப் புன்னகையை இயக்கி ஹீரோவாகவும் நடித்தார்.
இப்போது பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா நடிக்கும் ஜன்னல் ஓரம் படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் கல்யாணம் என்ற படத்தில் ஹீரோவாக மட்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கரு பழனியப்பன். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அமல் ராஜ் இயக்குகிறார். லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார்.
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கல்யாணம் படத்தின் மற்ற நடிகை, நடிகர்கள் குறித்த விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வாக அறிவிக்க உள்ளனர்.
Post a Comment