நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளன்று பிரியாணி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர்கள் தங்களின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை செய்து விளம்பரம் தேடிக் கொள்வார்கள்.
ஆனால் இப்போது தாங்கள் நடித்த படத்தில் டீஸர், பர்ஸ்ட் லுக் ஆகியவற்றினை வெளியிட்டு விளம்பரப்படுத்துகின்றனர்.
அந்தவகையில் இப்போது கார்த்தி தனது 36 வது பிறந்தநாளினை மே 25ம் தேதி கொண்டாடப் போகிறார். அன்றைய தினம் தன்னுடைய பிரியாணி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பிரியாணி படம் யுவன் சங்கர் ராஜாவின் 100 வது படம். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் கார்த்தி உடன் ஹன்சிகா,ராம்கி, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
Post a Comment