பீட்சா இயக்குநரின் கதாநாயகியாகும் லட்சுமி மேனன்

|

Karthik Subbaraj Gets Super Hit Heroine For His Next

பீட்சா என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படத்தினை மதுரை நகரை களமாக்கி படமாக்கப் போகிறாராம்.

ஹீரோ சித்தார்த் என முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் கதாநாயகி தேடுதல் வேட்டையில் இயக்குநர் மனதில் கிளிக் ஆனது லட்சுமி மேனன் என்கின்றனர்.

கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றவர் லட்சுமி மேனன். சுந்தபாண்டியன், கும்கி ஆகிய இரண்டு படங்களுமே நூறு நாட்கள் ஓடியவை. திரைக்கு வரப்போகும் குட்டிப்புலி படமும் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

எனவேதான் மதுரை சப்ஜெக்ட் என்ற உடன் லட்சுமி மேனனை தேர்வு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது பற்றி கருத்து கூறியுள்ள லட்சுமி மேனன், கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லும் விதம் ‘சம்திங் ஸ்பெசல்' என்று கூறியுள்ளார்.

 

Post a Comment