கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அம்மாவாக சுகாசினி

|

Suhasini Plays Ramanujan Mother

உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ஸ்ரீனிவாச ராமனுஜன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

மோகமுள், முகம், பாரதி, பெரியார் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஞான ராஜசேகரன்தான் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமனுஜத்தின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுத்து வருகிறார். மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பேரன் அபிநய் இந்த படத்தில் ராமானுஜராக நடிக்கிறார். ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.

ராமானுஜர் வேடத்தில் நடிக்க முதலில் மாதவனைதான் அணுகி இருந்தார்களாம். ஆனால் அவர் நடிக்காததால் சித்தார்த் நடிக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் ராமானுஜர் வேடத்தில் புதுமுகமான அபிநய் நடிக்கிறார். படத்தில் ராமானுஜரின் மனைவியாக பாமா நடிக்கிறார்.

அம்மாவாக சுகாசினி

இந்தப் படத்தில் ராமானுஜரின் அம்மாவாக நடிகை சுகாசினி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு மற்றும் லண்டன் நடிகர்கள் கெவின் மெக்கோவன், கிரஹாம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராமானுஜர் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

 

Post a Comment