சென்னை: தான் பக்கா சைவம் என்று கூறி வந்த கழுகு நடிகை தற்போது நள்ளிரவு பார்ட்டிகளுக்கு ரகசியமாக வந்து மூக்கு முட்ட குடிப்பதோடு அசைவ உணவு வகைகளை செம கட்டு கட்டுகிறாராம்.
கழுகு நடிகை, தான் ஒரு பக்கா சைவப் பிரியை என்று கூறி வந்தார். மேலும் நள்ளிரவு பார்ட்டிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அபிமான நடிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்ததையடுத்து அம்மணி மனம் மாறியுள்ளது. தற்போது அவர் சில நள்ளிரவு பார்ட்டிகளுக்கு ரகசியமாக வருகிறாராம்.
பார்ட்டியில் மதுபான வகைகளை மூக்கு முட்ட குடிக்கும் அவர், முன்பு எந்த அசைவ உணவுகளை பார்த்து மூக்கைப் பொத்தினாரோ தற்போது அதே உணவை செம கட்டு கட்டுகிறாராம். அவர் சாப்பிடுவதைப் பார்த்து நடிகர்களே மிரள்கிறார்களாம்.
மறுநாள் என்னப்பா இப்படி அசைவத்தை ஒரு புடி புடிக்கிறீங்க என்று நடிகர்கள் கேட்டால் நானா? நிஜமாவா? என்று எதுவுமே தெரியாதது போன்று கேட்கிறாராம் நடிகை. இதைக் கேட்ட நடிகர்கள் அது சரி சரக்கடிச்சா அம்மணி நடப்பது எதுவும் தெரியாது போல. அதுவும் நல்லதாப் போச்சு இனி அடிக்கடி பார்ட்டி வைத்து விடலாம் என்று நடிகர்கள் நினைக்கிறார்களாம். மேலும் அம்மணிக்கு பார்ட்டி கொடுக்க சில இளவட்ட நடிகர்கள் போட்டா போட்டி போடுகிறார்களாம்.
Post a Comment