ஹரிக்காக சிறுத்தையுடன் ஜோடி சேரும் நயன்தாரா

|

Nayanthara Romance Karthi

சென்னை: ஹரி கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தில் அவர் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம்.

கேரளத்து அழகியான நயன்தாராவை ஐயா படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் ஹரி. அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹரி நயனை கேட்டுள்ளார். ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஹரி கார்த்தியை வைத்து புதுப் படம் ஒன்றை எடுக்கிறார். இதில் யாரை ஹீரோயினாகப் போடுவது என்று ரூம் போட்டு யோசித்த ஹரியின் ஞாபகத்திற்கு வந்தது நயன்தாரா முகம். உடனே நயனை அணுகி கார்த்தியை வைத்து படம் பண்ணுகிறேன், நீங்கள் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டாராம்.

நயனுக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment