சென்னை: நடிகர் கார்த்தி தனது பிறந்த தினத்தை கும்பகோணத்தில் எளிமையாக கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.
மே 25 நடிகர் கார்த்தியின் பிறந்தநாளாகும். இதனையொட்டி சென்னையில் கார்த்தி ரசிகர்கள் நலத்திட்ட பணிகளுக்கு், ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.
வடசென்னையில் கார்த்தி ரசிகர்கள் 1000 பேர் ரத்ததானம் செய்கின்றனர். எழில் நகர் பி.வி. காலனியில் சமபந்தி விருந்து நடக்கிறது. 2 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
தங்க மோதிரம் பரிசு
திருவள்ளூரில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இதற்கான ஏறபாடுகளை கே.இ.ஞானவேல் ராஜா, தலைமையில் ரசிகர்கள் வழங்குகின்றன.
கும்பகோணத்தில் கார்த்தி
கார்த்தி தற்போது கும்பகோணத்தில் ஆல் இன் ஆல் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது எனவே லீவ் போடாமல் படப்பிடிப்பு அரங்கில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடுவேன் என்று கூறியுள்ளார் கார்த்தி.
Post a Comment