சென்னை: சிம்மக் குரலோன் டி.எம்.செளந்தரராஜன் உடலுக்கு இசைஞானி இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்.
நேற்று மாலை டிஎம்எஸ்மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பல்துறையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் டி.எம்.எஸ்ஸின் மரணம் உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி.எம்.எஸ்ஸின் வீட்டுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டி.எம்.சவுந்தரராஜன் குரல் மாதிரி இன்னொருத்தர் வரமுடியாது. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய குரல். அவர் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது.
எவ்வளவு புதியதாக பாடல்கள் வந்தாலும், அவருடைய பாடல்களை கேட்டு, ரசிக்காதவர்கள் இல்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் இளையராஜா.
Post a Comment