முதல்வரைச் சந்தித்து திருமண அழைப்பு கொடுத்த ஜிவி பிரகாஷ்

|

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு விடுத்தனர் ஜிவி பிரகாஷ் குடும்பத்தினர்.

ஏஆர் ரஹ்மானின் உறவினரும் பிரபல இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவியை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

gv prakash saindhavi invites cm person
25 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார், திருமணத் தேதியை அறிவிக்காமல் ஒத்திப் போட்டு வந்தார்.

இப்போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் ஜூன் 27-ம் தேதி சைந்தவியைக் கைப்பிடிக்கப் போவதாக ஜீவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான அழைப்பிதழை முதல்வருக்கு ஜிவி பிரகாஷ் குடும்பத்தினர் நேரில் சென்று கொடுத்தனர். ஜிவி பிரகாஷ், சைந்தவி மற்றும் இருவரின் பெற்றோரும் இணைந்து அழைப்பிதழ் கொடுத்தனர். புதுமணத் தம்பதிகளாகப் போகும் ஜிவி பிரகாஷையும் சைந்தவியையும் முதல்வர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

 

Post a Comment