சென்னை: ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜாராணி படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த மாதிரி படம் வெளியாகும் முன் அவர் வாழ்த்துவது அரிது. இந்தப் படத்துக்கு அந்த பெருமை கிடைத்திருக்கிறது.
காரணம், இந்தப் படத்துக்கு செய்யப்பட்ட பரபர விளம்பரங்கள்.
ஆர்யா - நயன்தாராவிற்கு திருமணம் என்று கூறி அழைப்பிதழ் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியிருந்தார் படத்தின் இயக்குநர் அட்லீயும் தயாரிப்பாளர் ஏஆர் முருகதாசும்.
பின்னர் ஒரு நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுக்கான விளம்பரம் அது என்று தெரிவித்தனர். அந்த ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் இயக்குனர் அட்லீயை அழைத்து பேசினாராம் ரஜினி. இது குறித்து இயக்குனர் அட்லீ, "இன்று தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தேன். சிறிது நேரம் பேசினார். ராஜா ராணி படத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். என்ன ஒரு அற்புதமான நாள்," என்றார்.
பிடிக்காத இருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்குமே காதலி- காதலன் இருக்கிறார்கள். இந்த பொருந்தாத இணை எப்படி பொருந்திப் போகிறது என்பதுதான் ராஜா ராணி கதை.
Post a Comment