சென்னை: ஹன்சிகா போடும் கன்டிஷன்களையும், வைக்கும் செலவுகளையும் பார்த்து தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.
ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவரானதும் தனது சேட்டையைக் காண்பிக்கிறாராம். தனக்கு கொடுக்கும் ரூ.1 கோடி சம்பளத்தில் பாதியை முன்பணமாக கொடுத்துவிட வேண்டுமாம். மீதியை கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும்போதே கொடுத்துவிட வேண்டுமாம்.
அண்மை காலமாக அவர் கார் ஓட்ட ஒருவர், மேக்கப் போட ஒருவர், ஹேர் டிரஸ்ஸர், காஸ்ஸ்ட்யூமை கவனிக்க ஒருவர் என்று ஏகப்பட்ட உதவியாளர்களை வைத்துள்ளார். அவர் ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறார் அல்லவா. அதே போன்று தனது உதவியாளர்களுக்கும் தான் தங்கும் அதே ஹோட்டலில் அறைகள் ஒதுக்க வேண்டும் என்று ஹன்சிகா கன்டிஷன் போடுகிறாராம்.
தான் தங்கும் இடத்தில் உதவியாளர்கள் இருந்தால் மேக்கப்போட்டு ஷூட்டிங் செல்ல வசதியாக இருக்கும் என்கிறாராம். இதனால் ஹன்சிகா மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக செலவாகிறதாம்.
Post a Comment