என்னதான் கோடிகளில் சம்பளம் பெற்றாலும், சகல செல்வமும் கொட்டிக் கிடந்தாலும் அல்பமாக எதையாவது திருடி மாட்டிக் கொள்வது சில பிரபலங்களின் வாடிக்கை.
அப்படித்தான் மாட்டிக் கொண்டாராம் தமிழ் - தெலுங்கில் முன்னணியில் உள்ள ஒரு நடிகை.
சமீபத்தில் அவர் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் இறங்கிய அவர் அங்குள்ள டூட்டி ப்ரீ கடையில் நுழைந்திருக்கிறார். ஒரு விலை உயர்ந்த லிப்ஸ்டிக்கை திருடி பையில் போட்டுக் கொண்டு வெளியேறினாராம்.
அப்போது கடையின் பாதுகாவலர் நடிகையை மறித்து நிறுத்தி, பையில் உள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து கொடுத்துவிட்டு போகவும் என்றாராம்.
நடிகையோ, கடைக்குள் சர்க்யூட் கேமரா இருப்பது கூட தெரியாமல், 'நான் எதுவும் எடுக்கவே இல்லை. என்னை யார்னு நினைச்சே... தமிழ்-தெலுங்கில் நான் பிரபல நடிகையாக்கும்," என்று குதித்துள்ளார்.
உடனே கடையில் பதிவான வீடியோ க்ளிப்பை எடுத்துப் போட்டுக் காட்டியதும், வழிந்தபடி எடுத்துக் கொடுத்தாராம். மேற்கொண்டு எதுவும் செய்துவிட வேண்டாம் என கெஞ்சிய நடிகை, பலமுறை மன்னிப்புக் கேட்டுள்ளார். இதை உடனிருந்த சில பயணிகள் மகா கேவலாகப் பார்த்தார்களாம்!
Post a Comment