எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. இந்த காதல் வதந்திகளைக் கொஞ்சம் நிறுத்துங்களேன், என்று கேட்டுக் கொண்டார் நடிகை சமந்தா.
தமிழ், தெலுங்கு மீடியாவில் கடந்த சில மாதங்களாக பிரதானமாக பேசப்படுவது சமந்தா - சித்தார்த் காதல் பற்றித்தான். இருவரும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் உள்ளார்களாம்.
இருவரும் காளஹஸ்தி கோவிலுக்கு ஜோடியாக சென்று சமீபத்தில் வழிபட்டனர். ராகு-கேது பூஜை செய்தனர். பெற்றோர் காலில் விழுந்து ஆசியும் பெற்றனர்.
ஆனாலும் காதலை ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த அவரிடம், சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டதற்கு, "இதெல்லாம் வீண் வதந்தி.இப்போதைக்கு காதலுமில்லை, திருமணமும் இல்லை. எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எனவே இந்த வதந்திகளை நிறுத்தும்படி வேண்டுகிறேன். தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விகளைக் கூட நான் விரும்பவில்லை," என்றார்.
Post a Comment