மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோவின் தந்தை மாயம்

|

Actor Tarun Gopi S Father Missing

சென்னை: பிரபல நடிகர் தருண் கோபியின் தந்தை பொன்னையா தேவர் மாயமான சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தருண் கோபி. அவரது தந்தை பொன்னையா தேவர். அவர் சென்னை மதுரவாயலில் உள்ள தருண்கோபி வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு அவர் அருகில் இருந்த டீ கடைக்கு சென்றார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது. இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னையா தேவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தருண்கோபி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் பொன்னையா தேவரை தேடி வருகின்றனர்.

 

Post a Comment