அஜீத்தின் பில்லா 2 பட வில்லனாக தமிழில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால். இவர்தான் பின்னர் விஜய் நடித்த துப்பாக்கியிலும் வில்லனாக வந்தார்.
ஒரு தேர்ந்த தற்காப்புக் கலை நிபுணர் இவர். சந்தர்ப்ப வசமாக இந்தியில் தன் வாழ்க்கையை வில்லனாகத் தொடங்கினார். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் இவருக்கு ஏக மவுசு.
அலட்டிக் கொள்ளாத வில்லத்தனம் காட்டுவதுதான் இவர் பாணி.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 'நீங்கள் யாருடன் நடிக்க வேண்டும் என மிகவும் விரும்புகிறீர்கள்?" என்ற கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் என்று கூறினார்.
மற்றொரு கேள்வி, "இந்திய சினிமாவில் உங்களைக் கவர்ந்த நடிகர் அல்லது நடிகை?" என்ற கேள்விக்கு, "சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். காரணம், எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, தனக்கென ஒரு வழியை உருவாக்கி, அதை உறுதியுடன் நடைபோட்டு இந்த நாட்டின் இணையற்ற சாதனையாளராக மாறியுள்ள அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment