வயசாகி, சினிமாவுக்கு குட்பை சொல்லும் நேரம் நெருங்கும்போது, ஒவ்வொரு முன்னணி நடிகையும் பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
அம்பிகா, ராதா, ரோஜா, ரம்பா, ரேவதி என பல நடிகைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இப்போது த்ரிஷா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்துவரும் த்ரிஷா இப்போது கிட்டத்தட்ட தனது கடைசி ரவுண்டில் இருக்கிறார். அடுத்து திருமணம் என்று பேச்சு அடிபடும் சூழலில், இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில், த்ரிஷாவுடன் இணைகிறார்கள் ஓவியாவும் பூனம் பாஜ்வாவும். மூவரும் இணைபிரியா தோழிகளாக நடிக்கின்றனர்.
தனி ஹீரோ என்று யாரும் இந்தப் படத்தில் இல்லை. இயக்குநர் சமுத்திரக்கனி, தம்பி ராமையா போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
குறுகிய கால படமாக தயாராகும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.
Post a Comment