நடிகர் விஷால் மீது நடவடிக்கை இல்லை- நடிகர் சங்கம் முடிவு

|

No Action On Actor Vishal Artist Association

சென்னை: நடிகர் சங்கத்தை விமர்சித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் விஷால் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

‘விஸ்வரூபம்' பட பிரச்சினை ஏற்பட்டபோது, "கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் ஏன் உதவவில்லை, நடிகர் சங்கம் எங்கே போனது?'' என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பினார்.

இது சங்க விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறி, 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?' என்று விஷாலுக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

மேலும் அவரை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தான் அளித்த பதிலில், "விதிமுறைகள் எதையும் மீறவில்லை" என்று விஷால் பதில் தெரிவித்திருந்தார். அந்த கடிதத்தை நடிகர் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. நேரில் வந்து விளக்கம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து விஷால், நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

 

Post a Comment