'ஆர்யா வெட்ஸ் நயன்தாரா...' தேதி - மே 11, நேரம் இரவு 9 மணி...
-இப்படி வாசகங்கள் அடங்கிய ஒரு அழைப்பிதழ் பிரதியை இமெயிலில் அனுப்பி வைத்திருக்கிறார் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.
கூடவே,
'இந்த செய்தி பல நாட்களாக காற்றில் மிதந்து வரும் செய்திதான் ....
இதை பற்றி அறியாதவரோ தெரியாதவரோ யாரும் இல்லை ...
இது ஆச்சரியமூட்டினாலும் அதிர்ச்சி தரும் தகவல் இல்லை ...
நெஞ்சை அள்ளிய அரசன் அரசியை தன்னிலை மறக்க செய்யும் தருணம் ...
இந்த மாபெரும் தருணம் அரங்கேறும் நாள் நாளை ...'
- என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மின்னஞ்சல் வந்த கையோடு, பரபரவென செய்தி பரவ ஆரம்பித்துவிட்டது.
இதுகுறித்து மின்னஞ்சலை அனுப்பிய பிஆர்ஓவிடம் விசாரித்தபோது, 'இந்த அழைப்பிதழை எங்களுக்கு அனுப்பி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பச் சொன்னார்கள். அனுப்பி விட்டோம். வேறு எதும் எங்களுக்குத் தெரியாது,' என்றார்.
சினிமா விளம்பரம்
ஆனால் நாம் விசாரித்த வகையில் இது ஆர்யா - நயன்தாரா நடிக்கும் ராஜா ராணி படத்துக்கான எதிர்மறை விளம்பரம் என்பதே உண்மை என்றார்கள்.
ஏற்கெனவே இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஆர்யாவும் நயன்தாராவும் கோவா சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
இப்போது நாளை இரவு திருமணம் என்று செய்தி வெளியிட்டுள்ளனர். ஆர்யா முஸ்லிம் என்பதால் இரவில் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
+ comments + 1 comments
may be true. Marriage is only a scene and not sacred for these people.Ready to fOol the public also.
Post a Comment