சென்னை: துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள்.
இந்தப் படம் வரும் ஜனவரி 2014-ல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படமாக துப்பாக்கி பேசப்பட்டது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். விஜய் - காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.
அதன் பிறகு இருவரும் அளித்த பேட்டிகளில், மீண்டும் ஒரு படத்தை இணைந்து தரவிருப்பதாகக் கூறினார்கள்.
ஆனால் திடீரென அஜீத்தை வைத்து முருகதாஸ் படம் பண்ணப் போவதாக ஒரு செய்தி வெளியானது.
இந்த நிலையில், துப்பாக்கி இந்தகிப் படத்தை முடித்ததும் ஏ ஆர் முருகதாஸ் - விஜய் இணைவதாகக் கூறப்படுகிறது.
விஜய் இப்போது ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபரில் முடிந்துவிடும். அதன் பிறகு முருகதாஸ் படம் தொடங்குமாம்.
இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்கிறார்கள். அஜீத்துக்காக உருவாக்கிய இரட்டை வேடக் கதையைத்தான் விஜய்யை வைத்து எடுக்கப் போகிறாராம் முருகதாஸ்.
Post a Comment